nayanthara startes dubbing kaathu vaakula rendu kadhal

Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cf572b6c-1bb3-4b13-8622-ade329f9d843" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_25.jpg" />

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில்,நடிகை நயன்தாரா ‘காத்துவாக்குலரெண்டு காதல்’ படத்தின் டப்பிங் பணியை இன்று (2.12.2021) தொடங்கியுள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர்,அத்துடன் டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Advertisment